search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை கைதி"

    டெல்லி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதியது தொடர்பாக டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. #DelhiCourt #TiharInmate
    புதுடெல்லி:

    டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.  சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.



    மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DelhiCourt #TiharInmate
    சென்னை புழல் சிறையில் கைதியிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail

    செங்குன்றம்:

    கும்மிடிப்பூண்டி சுவாமி ரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பரத் என்கிற சிவபரத் (27). ஒரு வழக்கு தொடர்பாக இவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு 10 மணி அளவில் பரத் ஜெயில் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். சிறை போலீசாரை பார்த்ததும் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது அறையில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு செல்போன், சார்ஜர், 2 சிம்கார்டு ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு செல்போன், சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை எங்கிருந்து வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் ஜெயிலில் கடந்த மாதம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கைதியிடம் செல்போன் சிக்கியுள்ளது. #PuzhalJail

    சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    ராயப்பேட்டையை சேர்ந்தவர் விமலநாதன் என்கிற சைகோ விமல் (24). திருட்டு வழக்கு தொடர்பாக மறைமலைநகர் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தான் அடைக்கப்பட்டிருந்த சிறை வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த சிறை காவலர்கள் அதை பார்த்து விட்டனர். உடனே விமலநாதன் தான் பேசிக் கொண்டிருந்த செல்போனை கழிவறையில் வீசி விட்டார். இதற்கிடையே அதிகாரிகளுடன் வந்து அங்கு சோதனை செய்த போலீசார் கழிவறையில் இருந்து செல்போனை எடுத்தனர்.

    இது குறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    சென்னை:

    ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    ×